மாவட்ட செய்திகள்

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

காட்பாடி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது.

ரெயிலில் சென்னையை சேர்ந்த எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் தன்னுடைய 40 வயது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்தார்.

கோவை வந்த போது ரெயிலில் 4 பேர் ஏறினர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ரெயில் ஈரோட்டை கடந்த போது அந்த 4 பேரில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டரின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்தனர்.

ரெயில், காட்பாடி ரெயில் நிலையம் வந்த போது அவரை காட்பாடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அந்த பெண் ரெயில் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், கோவையை சேர்ந்த இரும்பு வியாபாரி பாலசுந்தரம் (57) என தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

----

Reporter : M. MOHAN Location : Vellore - KATPADI