மாவட்ட செய்திகள்

கிருமிநாசினி

உடுமலையில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா என்று திருப்பூர் மாவட்ட பொறுப்பு அதிகாரியானஉதவி கலெக்டர் பயிற்சி அப்டாப் ரசூல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலை

உடுமலையில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா என்று திருப்பூர் மாவட்ட பொறுப்பு அதிகாரியானஉதவி கலெக்டர் பயிற்சி அப்டாப் ரசூல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழிப்புணர்வு வாரம்

உடுமலையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார்ஆங்காங்கு ஆய்வு செய்து முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா 3வது அலை விரைவில் வர உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 3வது அலையை எதிர்கொள்ளும்வகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அத்துடன் நேற்று முன்தினம் முதல் வருகிற 8ந்தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி உடுமலையில், நகராட்சி வாகனத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு, அதன்மூலம் பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்கும்படி நகராட்சி பகுதி முழுவதும் வீதி, வீதியாக சென்று ஒலி பெருக்கி மூலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

உதவி கலெக்டர் திடீர் ஆய்வு

இந்த நிலையில் அரசின் உத்தரவுப்படிகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திருப்பூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அதிகாரியாக உதவி கலெக்டர் அப்டாப் ரசூல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் நேற்று உடுமலைக்கு வந்திருந்தார். அவர் உடுமலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் உடுமலை மத்திய பஸ்நிலைத்திற்குள் ஆய்வு செய்தார். மத்திய பஸ்நிலையத்தில் அவர், பயணிகளிடம் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி துண்டு பிரசுரங்களை வினியோகித்தார்.

மத்திய பஸ்நிலையம், பழனி சாலை, கல்பனா சாலை உள்ளிட்ட இடங்களில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் மற்றும் கடைகளுக்கு சென்று, கடைகளுக்கு முன் பகுதியில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா, கடை உரிமையாளர், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்துள்ளார்களா என்று ஆய்வு செய்தார்.