சினிமா துளிகள்

கூத்துப்பட்டறையில் பயிற்சி!

மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தவர் சர்ஜுன் கே.எம்.

தினத்தந்தி

சர்ஜுன் கே.எம். இயக்கி, சமீபத்தில் வெளியான படம், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்.' அதில், தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர், விவேக் ராஜ்கோபால். இவரும், கிஷோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார்கள். சினிமாவுக்கு வந்தது எப்படி? என்பது பற்றி விவேக் ராஜ்கோபால் சொல்கிறார்:-

``நான், சென்னைவாசிதான். ரஜினிகாந்தின் `ஆஸ்ரம்' பள்ளியில் படித்தேன். கல்லூரி படிப்பை லயோலாவில் முடித்தேன். என்னை சினிமா ஆசை விடாமல் துரத்தியது. கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றேன்.

நான் கதாநாயகனாக வர விரும்பவில்லை. நல்லதோ, கெட்டதோ எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன். என் கதாபாத்திரம் பேசப் படணும். அது போதும்'' என்கிறார், விவேக் ராஜ்கோபால்!

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்