புதுச்சேரி

வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு பயிற்சி

காரைக்காலில் நாடாளுமன்ற தோதலை முன்னிட்டு வாக்குச்சாவடி நிலைய அதிகாகளுக்கு பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

காரைக்கால்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. காலையில் நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிகளுக்கும், மதியத்துக்கு மேல் காரைக்கால் (வடக்கு), காரைக்கால் (தெற்கு) மற்றும் நிரவி-திருப்பட்டினம் தொகுதிகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ஜான்சன் தொடங்கி வைத்தார். இதில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் குறித்து வாக்காளர் பதிவு அதிகாரி சச்சிதானந்தன், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் பொய்யாதமூர்த்தி, மதன்குமார், செல்லமுத்து, சண்முகசுந்தரம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இந்த முகாமில் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வாக்காளர் திருத்தப்பணி மேற்கொள்வதற்கான புத்தகம், நோட்டு, பேனா உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு