சினிமா துளிகள்

வெப் தொடரில் அறிமுகமாகும் திரிஷா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் திரிஷா, தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

தினத்தந்தி

கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

இதனால் நடிகைகள் பார்வை வெப் தொடர்கள் பக்கம் திரும்பி உள்ளது. ஏற்கனவே மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை திரிஷாவும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் வெப் தொடருக்கு பிருந்தா என பெயரிடப்பட்டு உள்ளது. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் தொடரை தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சூர்யா வங்கலா இயக்கும் இந்த வெப் தொடரில் நடிகை திரிஷா துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்