சினிமா துளிகள்

5-வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் திரிஷா

‘விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

தினத்தந்தி

வழக்கம்போலவே இந்தப் படத்திலும் வில்லன்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட இருக்கிறது. அந்த வகையில் வில்லன்களாக பிரித்விராஜ், சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த புதிய படத்தில் சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான திரிஷா இந்தப் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் மனைவியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.

'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆதி', 'குருவி' ஆகிய படங்களை தொடர்ந்து 5-வது முறையாக விஜய்யுடன், திரிஷா இணைந்து நடிக்க இருப்பது இரு தரப்பு ரசிகர் களையும் உற்சாகமாக்கி இருக்கிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு