மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் தாசில்தார் செந்தில்வேல் ஜீப்பில் ஆமத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் அனுமதியின்றி 5 யூனிட் மணல் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.

மணல் லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் ஆமத்தூர் போலீசில் ஒப்படைத்தார். ஆமத்தூர் போலீசார் லாரியை ஓட்டி வந்த தீபன் சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.