மாவட்ட செய்திகள்

தர்மபுரி அருகே அரசு நிலத்தில் நுரம்பு மண் அள்ளிய லாரி பறிமுதல்

தர்மபுரி அருகே அரசு நிலத்தில் நுரம்பு மண் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள குப்பூர் பகுதியில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி நுரம்பு மண்ணை அள்ளி லாரியில் ஏற்றுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் நாயக்கனஅள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் (வயது 27) மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.