சினிமா துளிகள்

வைரலாகும் துல்கர் சல்மான் - ராஷ்மிகா மந்தனா போஸ்டர்

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'சீதா ராமம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் சல்யூட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதில் ராணுவ அதிகாரியாக ராம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இதில் மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் சீதா ராமம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்