தூத்துக்குடியைச் சேர்ந்த மரியநவமணி சுமைலன் (வயது 40) என்பவர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன்(41) என்பவர், வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.
மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி தென்பாகம், வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் மேற்சொன்ன 2 பேரையும் நேற்று முன்தினம், போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.