மாவட்ட செய்திகள்

கொலை, கொலை முயற்சி வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, முத்தையாபுரம் பகுதிகளில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 25) மற்றும் முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த அருள்ஆனந்தம்(39) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கழுகுமலை, முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேற்சொன்ன போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் வேண்டுகோளின்பேரில், தூத்துக்கு மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரையும் நேற்று போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.