மும்பை

உத்தவ் சிவசேனாவை சேர்ந்தவர்: மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே சிவசேனாவில் இணைந்தார்

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த பெண் தலைவர் நீலம் கோரே. நேற்று ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார்.

தினத்தந்தி

மும்பை, 

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த பெண் தலைவர் நீலம் கோரே. இவர் மேல்-சபை துணை தலைவராக உள்ளார். ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்த போது, உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக இருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார். அஜித்பவார் கூட்டணி ஆட்சியில் இணைந்ததால் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே குழப்பம் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே சிவசேனாவுக்கு சென்றது உத்தவ் தாக்கரே தரப்புக்கு பின்னடைவாக அமைந்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்