புதுச்சேரி

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தொவித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவினை கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிற்சங்கங்கள் சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு அச்சகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினேஷ் பொன்னையா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. பிரதேச செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஞானசேகரன், அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏ.ஐ.சி.சி.டி.யு. தலைவர் மோதிலால், எல்.எல்.எப். செயலாளர் செந்தில், எம்.எல்.எப். செயலாளர் வேதாவேணுகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம் என்ற அமைப்பு சார்பில் சிவாஜி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமிப்பிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு