சினிமா துளிகள்

தகுதி இல்லாத நாங்க ஜெயிச்சிட்டா.. வைரலாகும் டாணாக்காரன் டிரைலர்

விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் டாணாக்காரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படம் வெளியானது. இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியானது. தற்போது டாணாக்காரன் படத்தில் விக்ரம் பிரபு நடித்து முடித்திருக்கிறார். டாணாக்காரன் படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கி இருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பான காவல்துறையினரை டாணாக்காரன் என்றுதான் அழைப்பார்கள். போஸ்டரிலும் விக்ரம் பிரபு அதே கெட்டப்பில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

டாணாக்காரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்