மாவட்ட செய்திகள்

அம்மாபட்டினத்தில் தடுப்பூசி முகாம்

அம்மாபட்டினத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மணமேல்குடி,மே.19-
அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிங்கவனம் வட்டார மருத்துவ துறை, அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பலர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். இதில் அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.