நவல்பட்டு, டிச.21 -
திருவெறும்பூர் உட்கோட்டத்தில் குற்றபிரிவு போலீசார் சில நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நவல்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வாகனம் ஓட்டி வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜான்பாட்ஷா (வயது 36) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்றும், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.