மாவட்ட செய்திகள்

காட்டுப்புத்தூர் அருகே வேன் மோதி வாலிபர் பலியானார்.

காட்டுப்புத்தூர் அருகே வேன் மோதி வாலிபர் பலியானார்.

காட்டுப்புத்தூர், டிச.26-
காட்டுப்புத்தூர் அருகே வேன் மோதி வாலிபர் பலியானார்.
வேன் மோதியது
காட்டுப்புத்தூர் அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகன் கந்தசாமி (வயது 31), இவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி- நாமக்கல் சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் பகுதியில் இருந்து தொட்டியம் நோக்கி சென்ற வேன் கந்தசாமி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் நாமக்கல்லில் உள்ளதனியார்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் தொட்டியம் அருகே உள்ள கோடியாம்பாளையத்தை சேர்ந்த கஜேந்திரகுமார் (29) என்பரை கைது செய்தனர்.