மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் கார் மோதி ஆந்திர வாலிபர் பலி

தடுப்பு சுவரில் கார் மோதி ஆந்திர வாலிபர் பலி

திருச்சி, ஏப்.20-
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி தேஜா (வயது 20). இவரும், சென்னை அய்யப்பன்தாங்கல் பெரிய குழத்துவான் சேரி பகுதியை சேர்ந்த செல்லப்பா (40), அவரது மகன் பாலச்சந்திரன் (12) ஆகியோர் ஒரு காரில் திருச்சி வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் திருச்சி பால்பண்ணை நான்கு வழிச்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் ரவிதேஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.