மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி

பெங்களூரை சேர்ந்த வாலிபர் விபத்தில் பலியானார்.

கிருஷ்ணகிரி:-

பெங்களூரு மஞ்சுநாத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 20). இவருடைய நண்பர் மஞ்சுநாத் (20). இருவரும் கடந்த 29-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். மோட்டார்சைக்கிளை சந்தோஷ் ஓட்டினார். கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி அருகில் சென்ற போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென திரும்பியதாக தெரிகிறது. அந்த மோட்டார் சைக்கிள் மீது, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த கார், இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் சந்தோஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மஞ்சநாத் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.