மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்.அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
அவருக்கு புது பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. அதை பயன்படுத்திக் கொண்ட வாணி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார்.