தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அனல் காற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து 2 கே அழகானது காதல்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தொடர்ந்து பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. 4-வதாக வசந்த பாலன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். வனிதா படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலைத்தளத்தில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.