சினிமா துளிகள்

சுருட்டு பிடிக்கும் வனிதா விஜயகுமார்.. வைரலாகும் புகைப்படம்

வனிதா விஜயகுமார் தற்போது நடித்து வரும் படம் “கடைசி தோட்டா”. மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.

இயக்குனர் நவீன் இயக்கத்தில் ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "கடைசி தோட்டா". இப்படத்தில் வனிதா விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வனிதா விஜயகுமார், சுருட்டு பிடிக்கும் அதிகாரியாக நடித்திருக்கிறார். வி.ஆர்.சுவாமிநாதன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...