புதுச்சேரி

கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற வாகனங்கள்

காரைக்காலில் காலை 9 மணி வரை பனி பொழிவு இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.

தினத்தந்தி

திருநள்ளாறு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்தூர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருமலைராயன்பட்டினம், நிரவி, வாஞ்சூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி வரை கடும் பனி பொழிவு ஏற்பட்டது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருநள்ளாறு கோவிலுக்கு வந்த பக்தர்கள் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். மேலும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றன. மேலும் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் தொடக்கத்திலே பனிப்பொழிவு ஏற்பட்டு, ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்கள் போல காரைக்கால் மாவட்ட கிராமங்கள் காட்சியளித்தன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து