சினிமா துளிகள்

அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா

வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது அஜித்குமார் அவர்களின் 62-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அடுத்த படத்தின் பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது