சினிமா துளிகள்

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்

விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி செய்தார். இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம் வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த குஷி படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்