சினிமா துளிகள்

விஜய் பட தயாரிப்பாளர் காலமானார்

தயாரிப்பாளர், இயக்குனர் என பண்முகத்தன்மை கொண்ட டி.ராமாராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தினத்தந்தி

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற யூத் படத்தை தயாரித்தவர் டி.ராமாராவ். இதேபோன்று தில், அருள், உனக்கும் எனக்கும், யாயா உள்ளிட்ட பல படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தார். தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் 83 வயதாகும் டி.ராமாராவ் உடல்நலக்குறைவு காரணமாக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். தயாரிப்பாளர் இயக்குனர் என பண்முக தன்மைக் கொண்ட டி.ராமாராவ்வின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்