சினிமா துளிகள்

விஜயசாந்தியின் புதிய தோற்றம்

தெலுங்கு சினிமாவில் வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் ஆகிய பணிகளில் இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அனில் ரவுபுடி. இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘பட்டாஸ்.’

தினத்தந்தி

கல்யாண்ராம் நடிப்பில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் தான் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் மொட்ட சிவா கெட்டசிவா என்ற பெயரில் வெளியானது.

பட்டாஸ் திரைப்படத்திற்குப் பிறகு, சுப்ரீம், ராஜா த கிரேட், பன் அன்ட் பிரஸ்ட்ரக்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இவர், தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவை வைத்து சரிலேரு நீக்கவெரு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராணுவ அதிகாரியாக மகேஷ்பாபு நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்திய ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதோடு ஒரு காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்த விஜயசாந்தி, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் சினிமா உலகிற்குள் பிரவேசிக்கிறார்.

கடைசியாக விஜயசாந்தி நடிப்பில் 2006-ம் ஆண்டு நாயுடம்மா என்ற திரைப் படம் வெளியாகி இருந்தது. அதன் பிறகு முழு நேர அரசியலுக்குள் நுழைந்த விஜயசாந்தி, சரிலேரு நீக்கவெரு திரைப்படத்தின் மூலம் மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் இவரது தோற்றம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தீபாவளி அன்று விஜயசாந்தியின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் சாந்தமாகவும், அதே நேரத்தில் அதிகார தோரணையுடனும் வீற்றிருக்கும் விஜயசாந்திக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு