சினிமா துளிகள்

தீபாவளி ரேஸில் இணையும் விக்ரம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம், அடுத்ததாக நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மகான். இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகான் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு