தானே,
தானே மாவட்டம் மிரா பயந்தர் பகுதியில் சுபம் ஆர்கடே முதல் மகேஷ்வரி பவன் ரோடு வரை சாலை போடுவதற்கான ஒப்பந்தம் ஜி.இ.பி.சி. என்ற நிறுவனத்துக்கு மிரா பயந்தர் மாநகராட்சி நிர்வாகம் வழங்கி இருந்தது. சமீபத்தில் சாலை பணியை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மணல் மூலம் சாலை போட இருந்த இடம் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் சாலை பணியில் விதிமீறல்கள் நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பயந்தர் நகர நிர்வாகம் சாலைப்பணியில் விதிமீறலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.44.94 லட்சம் அபராதம் விதித்தது.