முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு விஸ்வநாதர் கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று நான்காம் கால யாகபூஜை நடந்தது. அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் சுப்புலெட்சுமி, கோவில் நிர்வாகி ராமகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் மாநில நிர்வாகி கந்தவேல் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.