புதுச்சேரி

காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

காரைக்காலில் மகனை போலீசார் கைது செய்ததால் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டா.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்காலை அடுத்த விழிதியூர் சங்கரன் தோப்புத்தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது 48). இவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு, கார்த்திகேசன் (27) என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். கார்த்திகேசன் டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு முருகையன் செல்போன் எண்ணுக்கு மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசினர். அப்போது கார்த்திக்கேசனை குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்திருப்பதாகவும், தாங்கள் போலீஸ் நிலையம் வந்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த முருகையன், வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தின் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முருகையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை போலீசார் கைது செய்த வேதனையில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு