முன்னோட்டம்

பேய காணோம்

செல்வ அன்பரசன் இயக்கத்தில் மீரா மிதுன், தருண் கோபி, கோதண்டம், முல்லை நடிப்பில் உருவாகி வரும் ‘பேய காணோம்’ படத்தின் முன்னோட்டம்.

தினத்தந்தி

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ஆர். சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு "பேய காணோம்" என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, செல்வகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

செல்வ அன்பரசன் இயக்கி உள்ளார். மிஸ்டர் கோளாறு இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜ்.ஓ.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஏ.கே.நாகராஜ் மேற்கொள்கிறார்.

இப்படத்தின் கதை பற்றி படக்குழு கூறியதாவது: வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம்,நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது. என தெரிவித்துள்ளனர். 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை