மாவட்ட செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்

கோத்தகிரி பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சைல்டு லைன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சைல்டு லைன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சைல்டு லைன் கூட்டம்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் சைல்டு லைன் அமைப்பின் தாலுகா அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சைல்டு லைன் ஆலோசனைக்குழு தாலுகா தலைவரும், தாசில்தாருமான காயத்ரி தலைமை தாங்கினார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிந்து, டாக்டர் அசோக், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சண்முகானந்தன், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி விளக்கி பேசினார்.

தீர்மானங்கள்

மேலும் கோத்தகிரி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு, பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையை குறைப்பது, குழந்தை தொழிலாளர் தடுப்பு, மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தருவது, குழந்தை திருமணத்தைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தவிர குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அவர்களிடம் எடுத்துரைக்கும் வகையில் மாதந்தோறும் பள்ளிகளில் குறும்படம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்டுக்கொண்டனர். கூட்டத்தில் கல்வி மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.