மாவட்ட செய்திகள்

கைது செய்ய முயன்றபோது தயாரிப்பாளர் தப்பி ஓட்டம் நடிகர் துனியா விஜய் மீது வழக்கு

‘மாஸ்திகுடி‘ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி இறந்த வழக்கு தொடர்பாக கைது செய்ய முயன்றபோது தயாரிப்பாளர் தப்பி ஓடினார். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக நடிகர் துனியா விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கன்னட நடிகர் துனியா விஜய் நடித்து வெளியான படம் மாஸ்திகுடி. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நடந்தது. அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் குதிக்கும் காட்சியில் நடித்த சண்டை பயிற்சியாளர் அனில் மற்றும் உதய் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.