சினிமா துளிகள்

விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்தது யார் தெரியுமா?

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சிலரை அழைத்து சென்று சுற்றிக் காட்டியுள்ளார். அதில் பயணித்தவர்கள் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் படக்குழுவினரை அழைத்துச் சென்றுள்ளார். இயக்குனர் நெல்சன், மனோஜ், அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, சதீஷ் ஆகியோர் விஜய்யின் காரில் ஜாலியாக பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு