மாவட்ட செய்திகள்

சிக்கல், கீழ்வேளூர் பகுதிகளில் பரவலாக மழை

சிக்கல், கீழ்வேளூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவில் பனி பொழிவும் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் திடீரென மழை பெய்தது.இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. இதேபோல கீழ்வேளூர், தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை அகரகடம்பனூர், சிக்கல், ஆழியூர், சங்கமங்கலம், ஆவராணி, புதுச்சேரி, ஆலங்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.