இந்தி, மலையாளம் ஆகிய 2 மொழி பட உலகிலும், மூன்று அல்லது நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சர்வசாதாரணமாகி விட்டது.
யாதோங்கி பாராத், ஷோலே போன்ற இந்தி படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. வசூலில் பழைய சாதனைகளை முறியடித்தன.
தமிழில் இப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை டைரக்டு செய்வதற்கு டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் முன்வந்து இருக்கிறார். மாதவன், சிம்பு, புனித் ராஜ்குமார், டொவினோ ஆகியோரை வைத்து பிரமாண்டமான முறையில், ஒரு படத்தை இயக்குவதற்கு கவுதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டு இருக்கிறார்.