தர்மபுரி:
தர்மபுரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் பாலக்கோடு அருகே உள்ள கடமடை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராணி (வயது 35) என்பவரது வீட்டின் அருகே 1 டன் எடை கொண்ட 20 ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.