மாவட்ட செய்திகள்

பெண் விஷம் குடித்து தற்கொலை

பாணாவரம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் போலிப்பாக்கம் அடுத்த நெரிஜந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா (வயது 28).

இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். ராதிகாவிற்கு சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருதுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராதிகாவின் தந்தை சிவஞானம் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.