மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே ஆயிங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி செந்தாமரை (வயது 35). இவர், தீராத வயிற்று வலி காரணமாக நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தாமரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.