மாவட்ட செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

நாமகிரிப்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள அத்திப்பலகானூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி மாலதி (வயது 45). நேற்று காலையில் ஜெயராமன் அத்திப்பலகானூரில் இருந்து நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பபட்டிக்கு கட்டு கற்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். டிராக்டரில் அவருடைய மனைவி மாலதியும் அமர்ந்து சென்றார். பின்னர் கட்டு கற்களை தொப்பம்பட்டி பகுதியில் இறக்கி விட்டு ராசிபுரம் நோக்கி வந்தனர். டிராக்டரை ஜெயராமன் ஓட்டி வந்தார்.

இவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே வேலம்பாளையம் வேகத்தடை அருகே வந்தபோது, வேகத்தடை மீது டிராக்டர் ஏறி இறங்கிய நிலையில் மாலதி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.