செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள தவணை கிராமம் காலனி தெருவைச் சேர்ந்த ஆதீனம் மனைவி மாரியம்மாள் (வயது 40). இவருக்கு பல ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து மாரியம்மாள் தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய அலறல் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.