மும்பை

அம்பர்நாத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை- உடன் தங்கியவருக்கு வலைவீச்சு

அம்பர்நாத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவருடன் தங்கியிருந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை,

அம்பர்நாத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவருடன் தங்கியிருந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

படுகொலை

தானே மாவட்டம் அம்பர்நாத்தில் உள்ள நேவாலி பாடா குடிசைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பெண் ஒருவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 37 வயதான லட்சுமிபாய் மனோகர் என்ற அந்த பெண் அகோலாவை சேர்ந்தவர் என்றும், கடந்த 5 நாட்களுக்கு முன் ஆண் ஒருவருடன் வந்து இங்கு தங்கியதும் தெரியவந்தது.

வலைவீச்சு

இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்தவர்கள் என்றும், ஏதோ பிரச்சினையால் அந்த நபர் லட்சுமிபாய் மானோகரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பியது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற அந்த நபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்