களியக்காவிளை:
அழகியமண்டபம் பாலவிளையை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 32), தொழிலாளி. இவர் படந்தாலுமூட்டில் உள்ள ஒரு பறவைகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தர். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென விஷம் குடித்து விட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாரன்ஸ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.