வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் குருசாமி (46). கூலித்தொழிலாளி. கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினமும் 2 பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த குருசாமி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.