தேவகோட்டை,
தேவகோட்டை மேல பஜார் வீதியில் வசித்தவர் முனியாண்டி (வயது 57). இவர் திருச்சி-ராமேசுவரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலைக்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். முள்ளிக்குண்டு பிள்ளையார் கோவில் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி முனியாண்டி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.