நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே கீழ்ஈசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது34). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக டியூப் லைட் மற்றும் சீரியல் லைட் அமைத்து கொண்டு இருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.