மாவட்ட செய்திகள்

மகாராஜகடை அருகே விபத்து வேன் மோதி கல்குவாரி தொழிலாளி பலி

மகாராஜகடை அருகே நடந்த விபத்தில் வேன் மோதி கல்குவாரி தொழிலாளி பலியானார்.

குருபரப்பள்ளி:

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், அஜ்ஜனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). ஆந்திர மாநில கல்குவாரியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இவர், சின்ன வத்தல்புரம் பகுதியை சேர்ந்த பூமலை (30) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மகாராஜகடை பக்கமுள்ள சத்யாநகர் படேதலாவ் ஏரி பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூமலை படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மகாராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.