மாவட்ட செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

கல்லாவி,

சிங்காரப்பேட்டை அருகே உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று மதுபோதையில் நடுப்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.