மத்திகிரி:
ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 29). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெயராம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.